ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்பட்ட டிஜிட்டல் ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டுதலுக்கு எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு எதிர்ப்பு..!!

டெல்லி: ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்பட்ட டிஜிட்டல் ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டுதலுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. புதிய வழிகாட்டுதலில் ஆன்லைன் சூதாட்டங்களின் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அரசு சார்ந்த போலி தகவல்கள் பரப்புவதை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக இந்தியாவில் ஊடக சுதந்திரத்திற்காக செயல்படும் எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

போலி செய்திகளை கட்டுப்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் அரசுக்கு எதிரான எந்தவொரு செய்தியையும் வெளியிட முடியாத சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. பொது மக்களும் ஊடகங்களும் அரசை விமர்சனம் செய்ததற்காக வழித்தடத்தை தடை செய்யும் வகையில் இருக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

The post ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்பட்ட டிஜிட்டல் ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டுதலுக்கு எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: