குறைந்த விலையில் தனியார் நிலத்தை வாங்க சிட்கோவில் புதிய தனியார் நில கொள்முதல் கொள்கை: பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சட்டப்பேரவையில் நேற்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அது வருமாறு:

  • கடந்த நிதி ஆண்டில் ரூ.30 கோடியாக இருந்த ‘தமிழ்நாடு பழங்குடியினர், பட்டியலினத்தவர் புத்தொழில் நிதி’ இந்த நிதி ஆண்டில் ரூ.50 கோடியாக உயர்த்தப்படுகிறது.
  • பட்டியலின மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர்களுக்கு எளிதாக கடன் பெற அனைத்து மாவட்ட தொழில் மையங்களிலும் சிறப்பு வழிகாட்டி அலுவலர் நியமிக்கப்படுவார்.
  • தொழில்முனைவோர் அமைப்புகள் மூலம் உருவாக்கப்படும் தனியார் தொழிற்பேட்டைகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் 50 சதவீத அரசு நிதியுதவி, மானியம் பெறுவதற்கான குறைந்தபட்ச நில தேவையானது 50 ஏக்கரில் இருந்து 10 ஏக்கராக மாற்றியமைக்கப்படும்.
  • தொழிற்பேட்டை நிறுவுவதற்கு தமிழ்நாடு சிட்கோவே குறைந்த விலையில் தனியார் நிலத்தை வாங்க வரும் ஆண்டில் புதிய தனியார் நில கொள்முதல் கொள்கை உருவாக்கப்படும்.
  • தர்மபுரி மாவட்டம் அன்னசாகரத்தில் ஒரு விசைத்தறி குழுமம் அமைக்கப்படும்.
  • போடிநாயக்கனூரில் செயற்கை பட்டு அடை தயாரிக்கும் குறுங்குழுமத்திற்கான பொது வசதி மையம் மாநில அரசு மானியத்துடன் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

The post குறைந்த விலையில் தனியார் நிலத்தை வாங்க சிட்கோவில் புதிய தனியார் நில கொள்முதல் கொள்கை: பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: