என்எஸ்எஸ் திட்ட முகாம்

சாயல்குடி, ஏப்.6: புளியங்குடி கிராமத்தில் ஒரு வாரம் நடந்த என்.எஸ்.எஸ் திட்ட முகாமிற்கு கல்லூரி முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் இந்துமதி பாலமுருகன் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் நிர்மல்குமார் வரவேற்றார். புளியங்குடி,காக்கூர்,கதையன் ஆகிய 3 கிராமங்களில் என்.எஸ்.எஸ் திட்ட மாணவர் சார்பில் பள்ளிகள், வழிபாடு தலங்கள், ஊரணி, குடிநீர் குழாய் பகுதிகள் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்களில் குப்பை அகற்றுதல் போன்ற தூய்மை பணி மற்றும் மரம் நடுதல் போன்ற பணிகளை செய்தனர். மேலும் பிளாஸ்டிக், டெங்கு ஒழிப்பு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. போதை பொருள் தடுப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை, மனித உரிமைகள், நுகர்பொருள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முகாம் முடிவில் உதவி திட்ட அலுவலர் நாகராஜ் நன்றி கூறினார்.

The post என்எஸ்எஸ் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: