அரசு தோட்டக்கலை பண்ணையில் செடிகள் பெற்று பயனடையலாம்: துணை இயக்குனர் அறிக்கை

திருவள்ளூர்: தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அனி வௌியிட்ட அறிக்கை: மாவட்ட தோட்டக்கலைத் துறை மூலமாக திருவள்ளூர் ஒன்றியம், ஈக்காடு கண்டிகையில் அரசு தோட்டக்கலைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் விவசாயிகளுக்கு தேவையான கத்தரி, மிளகாய் குழிதட்டு நாற்றுகள், பப்பாளி மற்றும் முருங்கை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பண்ணையில் பொதுமக்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில் வீட்டுக்காய்கறி தோட்டத்திற்கு தேவையான செடிகள் விற்பணை செய்யப்படுகிறது. நடப்பாண்டில் விவசாயிகளுக்கு வழங்குவற்காக 3 ஆயிரம் பனை மர விதைகள் பாலிதீன் பைகளில் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தோட்டக்கலை அலுவலர் திவ்யாவை 9566272112 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு செடிகள் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post அரசு தோட்டக்கலை பண்ணையில் செடிகள் பெற்று பயனடையலாம்: துணை இயக்குனர் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: