×

கட்சியில் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது

விழுப்புரம், மார்ச் 28: விழுப்புரம் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் கற்பகமூர்த்தி தலைமையில் நடந்தது. பொருளாளர் இளங்கோ, துணை செயலாளர்கள் புருஷோத்தமன், சோமு ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
நகர செயலாளர் சர்க்கரை வரவேற்றார். மாநில ஆதிராவிட நலக்குழு புஷ்பராஜ், மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், நகர மன்ற தலைவர் சர்க்கரை தமிழ்செல்வி பிரபு, துணை தலைவர் சித்திக்அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பிரதிநிதி நந்தா நெடுஞ்செழியன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கோல்டு வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முன்னாள் நகரமன்ற தலைவரும், மாவட்ட பொருளாளருமான ஜனகராஜ் பேசுகையில், கட்சியில் என்னுடன், எனக்கு பிறகு வந்தவர்கள் மாநில பொறுப்புக்கும், எம்எல்ஏ போன்ற பதவிகளுக்கும் சென்று விட்டார்கள். நான் எந்த பதவிக்கும் ஆசைப்படுபவன் அல்ல. கட்சியில் அடிமட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும். அதற்காக நம் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல பதவிகளை வழங்கி வருகிறார். மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்கு மத்தியில் இருக்கும் ஒன்றிய அரசு அனுமதி அளிப்பதில்லை. இல்லையென்றால் கூட்டுறவு தேர்தல் முன்பே வந்திருக்கும். தற்போது ஏப்ரல் மாதத்தில் கண்டிப்பாக வரத்தான் போகிறது. இங்கிருக்கும் பலருக்கு பதவிகள் வழங்கத்தான் போகிறார்கள். பதவியில் வந்தாலும், வராவிட்டாலும் நாம் கட்சியில் இருப்பது பெருமைதான் என்றார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்பது, பூத்கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...