×

குடியாத்தம், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் செயலாளர்களுக்கு புதிய 5ஜி சிம் கார்டு: பிடிஓக்கள் வழங்கினர்

குடியாத்தம், மார்ச் 24: குடியாத்தம், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 72 ஊராட்சி செயலாளர்களுக்கு புதிய 5 ஜி சிம் கார்டு வழங்கப்பட்டது. அதற்கான மாத கட்டணத்தை அரசு செலுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் குடியாத்தம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 72 ஊராட்சிகள் உள்ளது. இங்கு பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு சார்பில் புதிய 5ஜி சிம் கார்டுகளை, குடியாத்தம் ஒன்றிய பிடிஓக்கள் கார்த்திகேயன், திருமலை ஆகியோர் வழங்கினர்.

அதேபோல் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பிடிஓக்கள் ஹேமலதா, சுவர்ணலதா ஆகியோர் வழங்கினர். மேலும் இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த சிம் கார்டுகளை உடனடியாக ஊராட்சி செயலாளர்கள் பயன்படுத்த வேண்டும், பிரதி மாதம் சிம் கார்டு கட்டணத்தை அரசு கணக்கில் இருந்து செலுத்தப்படும், ஊராட்சி செயலாளர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள சிம்கார்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதா என சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்காணிக்க வேண்டும்.

மேலும், இந்த செல்போன் எண்களை ஊராட்சி மன்ற அலுவலக தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு படும் படி எழுதப்பட வேண்டும், ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றத்தின் போது சிம்கார்டுகளை பணி மாறுதலின் வரும் ஊராட்சி செயலாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Ptos ,Emiratam ,Peranambatu Union ,
× RELATED சத்துணவு மையங்களில் கலவை சாதம்...