×

(வேலூர்) மின்கம்பங்கள் சீரமைப்பு பணி தீவிரம் கே.வி.குப்பம் சுற்றுப்புற பகுதியில்

கே.வி.குப்பம், மார்ச் 21: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்தது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக பி.கே.புரம், கீழ் ஆலத்தூர், நாகல், தேவரிஷிகுப்பம், சென்னங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தது. இந்நிலையில் தற்போது மின்வாரிய ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய துறையினர் கூறுகையில், ‘மின்வாரிய துறையினர் சார்பில் சாய்ந்துள்ள மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். ம அவ்வாறு சரிசெய்யும் போது கூடுதலாக சரிசெய்யபட வேண்டிய மின்கம்பங்களையும் பார்வையிட்டு வருகின்றோம். இதுவரை சுமார் 50க்கு மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சரிசெய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. புதியதாக மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டு சேதமடைந்துள்ள பழைய மின்கம்பங்கள் அதில் உள்ள மின் ஒயர்களை அகற்றிவிட்டு புதியதாக மின்கம்பங்கள் அமைத்து அதற்குரிய மின் விநியோகம் கொடுத்து வருகிறோம்’ என்றனர்.

Tags : Vellore ,KV Kuppam ,
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது