முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 20: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பாரனூர் ஆலய வளாகத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், யூனியன் சேர்மன் ராதிகா பிரபு, துணை சேர்மன் சேகர், கொத்தியார் கோட்டை மனிமாறன், பேரூராட்சி தலைவர் மௌசுரியா கேசர்கான், தெய்வேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மஞ்சுவிரட்டு போட்டியில் 15க்கும் மேற்பட்ட காளைகள் சீறி பாய்ந்தது. இந்த காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்கள் 15 குழுவினர் களத்தில் இறங்கி மாடுகளை பிடித்தனர்.

இதில் ஒரு சில மாடுகள் வீரர்களின் பிடியிலிருந்து தப்பி சென்றது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வழங்கினார். அதேபோல் மாடுகளை பிடித்து அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை காண்பதற்கு ஆர்.எஸ்.மங்கலம், இந்திரா நகர், பாரனுர், வெட்டுக்குளம், ஊரணங்குடி, சித்தூர் வாடி, அடந்தனார் கோட்டை, ஆவரேந்தல், இரட்டையூரணி, கீழக்கோட்டை, உப்பூர், கடலூர், கொத்தியார்கோட்டை, கருங்குடி, சோழந்தூர், சீனாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வடமாடு மஞ்சுவிரட்டை கண்டு களித்தனர்.

விழாவிற்கு திமுக நிர்வாகிகள் சோழந்தூர் பாலகிருஷ்ணன், உப்பூர் கிருஷ்ணன், பேரூராட்சி துணை தலைவர் ராஜு, பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் மருத்துவமனை மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சையளித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையிலான குழுவினரும், கிராமத்தினரும் செய்திருந்தனர்.

Related Stories: