எந்த உதவி தொகைக்கும் புரோக்கர்களை நம்பி ஏமாறாதீங்க: போளூர் தாலுகா அலுவலகம் அறிவிப்பு

போளூர், மார்ச் 19: எந்த உதவி தொகை பெறுவதற்கும் புரோக்கர்களை நம்பாதீங்க என போளூர் தாலுகா அலுவலகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுளளது. போளூர் தாலுகா அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாகவே புரோக்கர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஏதாவது ஒரு கட்சி பெயரை சொல்லி கொண்டு புரோக்கர்கள் வலம் வருவது வாடிக்கையாக உள்ளது. முதியோர் உதவி தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவி ெதாகை, புதிய குடும்ப அட்டை, நிலம் தொடர்பான பிரச்சனை மற்றும் ஆவணங்கள் பெற்று தருதல், வண்டல் மண் பர்மிட் வாங்குதல் என எதுவாக இருந்தாலும் புரோக்கர்கள் எங்களிடம் வாங்க.. நாங்கள் பெற்று தருகிறோம் என அங்கு வரும் ஏழை எளிய மக்களை தங்கள் வலையில் வீழ்த்தி பல ஆயிரம் பணம் கறக்கின்றனர்.

ஆனால் உதவி தொகை தான் வருவதில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் அப்பாவி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தங்கள் நிைலயை கூறி வருகின்றனர். மேலும் எல்லாமே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை வந்து விட்டதால் புரோக்கர்கள் மூலம் வரும் பணத்தை கைவிட மனமில்லாமல் சில அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் போளூர் தாலுகா அலுவலகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தாசில்தார் ச.சஜேஷ்பாபு, அலுவலகத்திற்கு வெளியே எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளளார். அதில் போளூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அலுவலகத்தில் நேரடியாக கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

சான்றுகள் மற்றும் ஆவணங்கள் பெற்று தருவதாக அலுவலர்களின் பெயர்களை கூறி இடைத்தரகர்கள் தங்களை அனுகினால் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது என்று அதில் குறி்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போளூர் தாசில்தார் ச.சஜேஷ்பாபுவிடம் கேட்ட போது, ‘‘என் பணி காலத்தில் தாலுகா அலுவலக வளாகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். அடுத்த கட்டமாக அலுவலகம் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதனை மீறி யாராவது செயல்பட்டால் அது குறித்து போலீசாரிடமோ, என்னிடமோ பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: