×

(வேலூர்)அரசு பள்ளி, ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் ஆய்வு ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் கிராமத்தில்

ஒடுகத்தூர், மார்ச் 17: ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி, ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி மற்றும் ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் பிரியா(பயிற்சி) நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விஏஓ அலுவலகத்தில் உள்ள கோப்புகளை சரி பார்த்து ஊராட்சியில் உள்ள மக்கள் தொகை, கால்நடைகளின் எண்ணிக்கைகளை கேட்டறிந்தார்.
மேலும், அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடிக்கு சென்று மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை குறித்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அங்குள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சரியான முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல், நூறு நாள் திட்டம், மகளிர் குழுவினரை நேரில் சந்தித்து அவர்களின் நிறை குறைகளை பற்றி விசாரணை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஆர்ஐ நந்தகுமார், விஏஓ சரளா மற்றும் கிராம உதவியாளர் உடனிருந்தனர்.

Tags : Vellore) Govt School ,Shops ,Odugathur ,Next Vannantangal Village ,
× RELATED சத்துணவு மையங்களில் கலவை சாதம்...