×

வேலூர் ஓட்டேரி ஐடி பொறியாளர் வீட்டில் 51 சவரன், ரூ.2 லட்சம் ரொக்கம் திருட்டு வழக்கில் தனிப்படையினர் தீவிர விசாரணை: குற்றவாளிகளுக்கு வலைவீச்சு

வேலூர், மார்ச் 15: வேலூர் ஓட்டேரியில் பொறியாளர் வீட்டில் பீரோவை உடைத்து மர்ம நபர்கள் 51 சவரன் நகைகளையும், ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் குற்றவாளிகளை தேடி தனிப்படையும் களம் இறங்கியுள்ளது. வேலூர் ஓட்டேரி கமலாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர்(45). இவரது மனைவி அனிதா(37). இவர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அனிதாவின் தாயார் கல்யாணி, வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியில் புதிய ஒரு வீடு கட்டி வருகிறாராம். அந்த பணியை மேற்பார்வை செய்ய குடும்பத்துடன் கடந்த கடந்த 10ம் தேதி அங்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, துணிகள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 51 சவரன் நகைகளையும். ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் கை ரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரத்தில் இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Sawaran ,Vellore Otteri ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!