கோத்தகிரி அருகே சுப நிகழ்ச்சிக்கு சென்றபோது பைக் -லாரி மோதி வாலிபர் பலி- 2 பேர் படுகாயம்

கோத்தகிரி, மார்ச் 7:  கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் வாலிபர் பலியானார். கிருஷ்ணாபுதூரை சேர்ந்த  நாகராஜ் (40). ஒரசோலை பூபதியூர் பகுதியை சேர்ந்த வெள்ளிங்கிரி (47), பொள்ளாச்சியை சேர்ந்த  பழனிச்சாமி(40) ஆகிய 3 பேரும் பைக்கில் ஒரசோலையில் நடக்கும் சுப நிகழ்ச்சிக்கு புறப்பட்டனர். பூபதியூர் பகுதியில் வந்தபோது எதிரே சரக்கு லாரி வந்தது.

 எதிர்பாராதவிதமாக பைக்கும், லாரியும் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு  கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கிருஷ்ணாபுதூரை சேர்ந்த நாகராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். பழனிச்சாமி, வெள்ளியங்கிரி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோத்தகிரி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: