5டன் பூமாலைகள் அனுப்பி வைப்பு

சேலம், செப்.30:திருமலையில் வாரி பிரமோற்சவத்திற்காக சேலத்தில் இருந்து 5டன் பூக்கள் மாலை தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.திருப்பதி திருமலையில் வாரி பிரமோற்சவம் விழா அக்.5ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் பக்திசாரர் பக்த சபா சார்பில் 5 டன் மஞ்சள் சாமந்தி, ஆரஞ்சு சாமந்தி பூக்கள் மாலையாக தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பூக்களை மாலையாக தொடுத்தனர். இவ்வாறு மாலையாக தொடுக்கப்பட்ட பூக்கள் நேற்றிரவு சிறப்பு பூஜை செய்யப்பட்டு லாரி மூலம் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பூ மாலைகள் வரும் 1ம் தேதி திருமலையில் அலங்கரிக்கப்படும் என்று நிர்வாகிகள் ெதரிவித்தனர்.

Related Stories: