வாழப்பாடி, டிச.31: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, தாண்டனூர் ஊராட்சி ஆத்துமேடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா (55), விவசாயி. இவர் வடக்கு வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவச்சந்திரன் (38) என்பவருடன், டூவீலரில் நேற்று தும்பல் ஆத்தூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளைவில் அதிவேகமாக சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ராஜா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், சிவச்சந்திரன் காயத்துடன் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
டூவீலரில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
- வஜப்பாடி
- ராஜா
- ஆத்துமேடு
- தண்டனூர் பஞ்சாயத்து
- பெட்டநாயக்கன்பாளையம்
- தும்பல்-ஆத்தூர்
- சிவச்சந்திரன்
- ராஜேந்திரன்
- வடக்கு சாலை...
