அண்ணா பிறந்தநாளையொட்டி புழல் சிறை கைதிகள் மேலும் 22 பேர் விடுதலை

புழல்: பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டும், 75வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு  விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. அதன்படி பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்யவும், பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை பெற தகுதியற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, புழல் சிறையில் இருந்து கடந்த 24ம் தேதி 15 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் புழல் மத்திய சிறையில் இருந்து 21 ஆண் கைதிகள், ஒரு பெண் கைதி என 22 கைதிகள் முன் விடுதலை செய்யப்பட்டனர். புழல் சிறையில் இதுவரையில் 3 பெண்கள் உள்பட 37 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்ட பிற கைதிகள் வரும் நாட்களில் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: