விருதுநகரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப். 21: அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை வழங்கக்கோரி, விருதுநகரில் ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். விருதுநகரில் கலெக்டர் அலுலகம் முன்பாக, அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் திருவண்ணாமலை தலைமையில், மாவட்ட செயலாளர் சிவபெருமான் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டம் மாதாந்திர பிடித்தம் ரூ.497ஐ ரத்து செய்து ரூ.350ஐ பிடித்தம் செய்ய வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியருக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வனத்துறை, ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம ஓய்வூதியர்களுக்கு ரூ.7,850 மாதந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி நிறைவு நாளுக்கு முன்னர் ஒழுங்கு நடவடிக்கை இறுதி செய்து ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும். ரயில் பயணங்களில் ரத்து செய்த மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Related Stories: