நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதுமை பெண் திட்டத்தின் மூலம் 4 ஆயிரம் மாணவிகள் பயன்பெறுவார்கள் கீழ்வேளூர் அருகே குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கீழ்வேளூர்,செப்.6: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் 75 அனக்குடி ஊராட்சியில் உள்ள அய்யடிமங்கலம் கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் 150 மாணவ- மாணவிகள் திருவாரூர் மற்றும் நாகையில் பள்ளி கல்லூரியில் சென்று படித்து வருகின்றனர். அய்யடிமங்கலத்தில் இருந்து வண்டலூர் செல்லும் 5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்து சாலையில் சென்று வர முடியாத நிலையில் உள்ளது. குடிநீர் தேக்க தொட்டி கடந்த சில வருடங்களாக பராமரிக்கப்படமால் பாசிபடர்ந்து மக்கள் குடிப்பதற்கு குடிநீர் உபயோகம் இல்லாமல் உள்ளது. இதை பலமுறை அரசு அதிகாரிகளிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் சீரமைத்து தரும்படி கேட்டும் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கிராம மக்கள், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அய்யடிமங்கலம் கடைத்தெருவில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.‌‌ இதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலை‌மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: