நத்தம் பகுதிகளில் நடைபெறும் வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் ஸ்டாமின் இயக்குனர் ஆய்வு

நத்தம், செப். 2: நத்தம் வட்டாரத்தில் 6 பஞ்சாயத்து கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளின் கீழ் சமுத்திராபட்டி பகுதியில் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றும் பணியினை ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார். அப்போது தொகுப்பு பயனாளிகளான விவசாயிகளிடம் ஆழ்துளை கிணறு அமைத்தல், தொகுப்பிற்கான பாதை வசதி, விவசாயிகளுக்கு தேவையான பழ மரக்கன்றுகள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்தல் ஆகியவை குறித்து அவர்களிடம் கலந்துரையாடினார்.மேலும் அங்குள்ள விதைப் பண்ணையையும், சிறுகுடி கிராமத்தில் நடைபெறும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள், பசுமைப் போர்வை இயக்க திட்டப் பணியான பட்டா நிலங்களில் வரப்பு ஓரம் நடவு செய்யப்பட்ட தேக்கு மரக்கன்றுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வேளாண் உதவி இயக்குநர் தேன்மொழி, வேளாண் அலுவலர் தாரணி, துணை வேளாண் அலுவலர் ராமதிலகம், உதவி வேளாண் அலுவலர்கள் செந்தில்குமார், தெய்வராஜ், அட்மா தொழில்நுட்ப மேலாளர் ராஜாங்கம், உதவி மேலாளர் சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: