திண்டுக்கல்லில் 63 நாயன்மார்களுக்கு சிவன் பார்வதி திருக்கயிலாய காட்சியளிக்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல், செப். 29: திண்டுக்கல்லில் அனைத்து சிவனடியார்கள் திருகூட்டம் சார்பில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் 63 நாயன்மார்களுக்கு சிவபெருமான் திருக்கயிலாய காட்சியளிக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி நேற்று 22ம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை அபிராமி அம்மன் கோவில் 63 நாயன்மார்களும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை கோட்டைகுளம் மலையடிவாரத்தில் இருந்து பார்வதியம்மை உடனமர்ந்த கைலாசநாதர் திருவீதி உலா புறப்பட்டு அபிராமி கோயில் முன்பு 63 நாயன்மார்களுக்கும் சிவபெருமான் திருக்கைலாய திருக்காட்சி நடைபெற்றது.

தொடர்ந்து சிவன் பார்வதி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, 63 நாயன்மார்கள், சிவகண வாத்தியங்கள் முழங்க பெண்கள் பல்லக்கு சுமந்தபடி நான்கு ரத வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை திண்டுக்கல் மாவட்ட அனைத்து சிவனடியார்கள் திருகூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post திண்டுக்கல்லில் 63 நாயன்மார்களுக்கு சிவன் பார்வதி திருக்கயிலாய காட்சியளிக்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: