வேளச்சேரி மயானபூமி 31-ம் தேதி வரை மூடல்; மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட வேளச்சேரி இந்து மயான பூமியின் மின்சார தகன மேடையை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், திரவ பெட்ரோலிய தகன மேடையாக மாற்றம் செய்வதுடன், அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால், மே 5ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி இந்த மயானபூமி இயங்காது என ஏற்கனவே அறிவிக்கபட்டது.

 

தற்போது, எல்பிஜி தகனமேடை மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வரும் 31ம் தேதி வரை மயானபூமி இயங்காது. எனவே, பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-163க்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மயான பூமி மற்றும் வார்டு-177க்கு உட்பட்ட வேளச்சேரி-பாரதி நகர் மயான பூமியினை பயன்படுத்திக்கொள்ளலாம்  என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: