மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடிப்பூர திருவிழா வெள்ளி ரதம் வீதியுலா புறப்பாடு

திருவிடைமருதூர், ஆக. 3: திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளி ரதம் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயில் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி தலமாக போற்றப்படுகிறது. பிரகத்சுந்தர குஜாம்பிகை சமேத ஜோதி மகாலிங்க சுவாமி, தேவேந்திர நந்தி, மூகாம்பிகை அம்மன், மகாமேரு ஆகிய சன்னதிகள் புகழ் பெற்றவை.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆடிப்பூர அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காவிரி நதிக்கரையில் அஸ்திரதேவர் தீர்த்தம் அருளும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து இரவு ஜோதி மகாலிங்க சுவாமி, பிரகத்சுந்தர குஜாம்பிகை மற்றும் ஆடிப்பூர அம்மன் தனித்தனி ரதங்களில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடிப்பூர விழா வீதி உலா புறப்பாடு நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் மத் வேலாயுதம் தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயில் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பாபநாசம்: சுவாமிமலை அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆடிப்பூர உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை புண்ணியஸ்தானம், அம்பாள், விநாயகர், வீரபத்திரர், பேச்சியம்மன், பைரவர், ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.  தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கோயில் பக்தர்கள் செய்திருந்தனர். பிரம்மாண்ட நுழைவுவாயில் சுவரோவியங்கள், புல்தரை மற்றும் செடிகள், அழகிய ரப்பர் பேவர் வழிப்பாதைகள், கழிவறை வசதி, மின் ஆக்கி மற்றும் யூபிஎஸ் வசதி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அமர வசதிகள், தீயணைப்பு வசதிகள் செய்யப்படுகிறது.

Related Stories: