அறநிலையத்துறை இடத்தில் கடைகள் கட்டும் திட்டம்: மேயர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி கொசப்பேட்டை பகுதியில் ஆதி மொட்டையம்மன் மற்றும் கந்தசாமி திருக்கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அறநிலையத்துறை சார்பில் ₹1.55 கோடி மதிப்பில் பார்க்கிங் வசதியுடன் கூடிய கடைகள் கட்டும் பணியை, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 40 கடைகள் இந்த பகுதியில் கட்டப்பட உள்ளன. ஏற்கனவே அந்த பகுதியில் கடைகள் வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த கடைகள் வழங்கப்பட உள்ளன.

Related Stories: