வாலிபரை வெட்டிய வழக்கில் 4 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்

பெரம்பூர்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 60வது பிளாக் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (25), கடந்த 2017ம் வருடம் செப்டம்பர் மாதம் 10ம் தேதி, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 62வது பிளாக் வழியாக நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த 3 பேர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர், பணம் தர மறுத்ததால் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இந்த வழக்கில் அருண், ஜெகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 4 ஆண்டாக தலைமறைவாக இருந்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (எ) விக்கியை (32) எம்கேபி நகர் காவல் நிலைய தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: