புது மண்டபத்தில் வைகாசி உற்சவம் இன்று தொடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் துணை கமிஷனர் அருணாச்சலம் அறிக்கையில், ‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவம் இன்று தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. இன்று முதல் வரும் 11ம் தேதி முடிய 1ம் திருநாள் முதல் 9ம் திருநாள் வரை பஞ்ச மூர்த்திகளுடன் மாலை 6 மணியளவில் அம்மன், சுவாமி கோயிலில் இருந்து புது மண்டபம் செல்கின்றனர். அங்கு பத்தியுலாத்துதல் தீபாராதனை வகையறா நடக்கிறது. பின் 4 சித்திரை வீதிகளை சுற்றி அம்மன், சுவாமி கோயில் வந்தடைகின்றனர். 12ம் தேதி 10ம் திருநாளன்று காலையில் புதுமண்டபத்தில் எழுந்தருளி பகலில் தங்கி வழக்கம் போல் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி சுற்றி கோயில் வந்து சேருவர். வைகாசி வசந்த உற்சவ நாட்களில், கோயில் சார்பாக உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார். மதுரை வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்த கண்ணன் கூறும்போது, ‘‘மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் திருமலை நாயக்கர் காலத்தில் புதுமண்டபத்தில் நடந்தது. தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் மண்டபத்தில் சுமார் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பி திருவிழா நடக்கிறது’’ என்றார்.

Related Stories: