ஹாக்கி அணி வெண்கலம் பதக்கம் வென்றது இந்திய அணிக்கும், தமிழக வீரர்களுக்கும் அமைச்சர் ெமய்யநாதன் வாழ்த்து

ஆலங்குடி, ஜூன்2:இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா ஹாக்கி அணி, நேற்று வெண்கலப்பதக்கம் வென்றது.இதை தொடர்ந்து பதக்கம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த நமது தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் பங்களிப்பு மகத்தானது என்றும்,இந்திய அணிக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்ட தமிழக வீரர்கள் கார்த்திக் மற்றும் மாரீஸ்வரன் ஆகியோருக்கும், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாட்டிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக சுற்றுசூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories: