கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து

பெரம்பூர்: கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கடந்த 20ம் தேதி பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் மீண்டும் 2வது முறையாக அங்கு தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த மாநகராட்சி மேயர் பிரியா, பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், 36வது வார்டு கவுன்சிலர் மலைச்சாமி, வடக்கு மண்டல வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.

Related Stories: