செல்போன் திருடிவிட்டு வீடு வீடாக தாவி தப்பிய கொள்ளையன் சிக்கினார்

சென்னை: பெரம்பூர் தீட்டி தோட்டம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (47). இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, காற்றுக்காக மொட்டை மாடியில் குடும்பத்துடன் தூங்கியுள்ளார். நள்ளிரவில், சுவர் ஏறி மொட்டை மாடிக்கு வந்த மர்மநபர், நாகராஜ் மனைவி அருகே வைத்திருந்த செல்போனை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றார்.

 அப்போது, அவரது கையை தெரியாமல் மிதித்து விட்டதால், திடுக்கிட்டு எழுந்த அவர், திருடன் திருடன் என்று கூச்சலிட்டுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட மர்மநபர், செல்போனுடன் அங்கிருந்து ஓடி, பக்கத்து வீடுகளின் மாடி வழியாக, வீடு வீடாக தாவி தப்பினார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட திரு.வி.க.நகர் போலீசார் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர், பெரம்பூர் தீட்டி தோட்டம் 4வது தெருவை சேர்ந்த சக்திவேல் (47) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Related Stories: