தூத்துக்குடி திருச்சிலுவை பள்ளியில் இன்றும், நாளையும் ஆதார் சேவை முகாம்

தூத்துக்குடி, மே 21: தூத்துக்குடி திருச்சிலுவை தொடக்கப்பள்ளியில் இன்றும், நாளையும் ஆதார் சேவை முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி விக்டோரியா எக்ஸ்டன்ஷன் சாலையில் அமைந்துள்ள திருச்சிலுவை தொடக்கப்பள்ளியில் தூத்துக்குடி கோட்ட அஞ்சல்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆதார் சேவை முகாம் நடக்கிறது. இன்று(21ம் தேதி) மற்றும் நாளையும் நடைபெறும் முகாமில் 0-5 வயது குழந்தைகளுக்கு புதிய ஆதார் எடுக்கப்படும். குழந்தையின் பிறப்பு சான்றிதழுடன் வரும் பெற்றோரின் ஆதார் அவசியம். இதுவரை ஆதார் இல்லாதவர்கள் புதிதாக பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் தகவல் திருத்தம், பெயர், பிறந்த தேதி, முகவரி, பாலினம், கைரேகை, கருவிழி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதாரில் மொபைல் எண் புதிதாக இணைக்கவும், மாற்றவும் செய்யலாம். ஆதாரில் உள்ள தகவல்களை திருத்தம் செய்ய கட்டணம் ரூ.50 பெறப்படும். அனைத்து அரசு சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் மிகவும் அவசியம். எனவே பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: