பைக் விபத்தில் தொழிலாளி பலி

கேடிசி நகர், மே 21:  மேலப்பாளையம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (58). அங்குள்ள பீடி கம்பெனியில் வேலை பார்த்துவந்த இவர், சம்பவத்தன்று தச்சநல்லூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு எஸ்ஐ நாராயணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: