எழும்பூர் ஸ்பார்டன் சாலையில் மீண்டும் பேருந்துகள் வேண்டும்; இ.பரந்தாமன் எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சட்டப் பேரவையில் எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன் (திமுக) பேசியதாவது: பேருந்து வழித்தடம் எண் 9, 24, 37டி என்ற 3 பேருந்துகளும் எழும்பூர் தொகுதிக்கப்பட்ட ஸ்பார்டங் ரோடு வழியாக சென்று கொண்டு இருந்தது. ஒரு வழி சாலையாக்கப்பட்ட பிறகு இந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது. இந்த வழித்தடம் மீண்டும் இருவழி சாலையாக மாற்றப்பட்ட பிறகும் கூட இந்தப் பேருந்துகள் இந்த வழித்தடம் மூலமாக செல்லவில்லை. எனவே மீண்டும் இந்த வழித்தட பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: ஸ்பார்டங் சாலை தற்போது இருவழி தடமாக மாற்றப்பட்டிருக்கிறது. எனவே அவ்வழிேய பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: