சூதாடிய 2பேர் கைது 9 டூவீலர் பறிமுதல்

போச்சம்பள்ளி, ஏப்.28: போச்சம்பள்ளி அருகே கொடமாண்டப்பட்டியில் உள்ள மாந்தோப்பில் சூதாட்டம் நடப்பதாக, போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடி கொண்டிருந்தவர்கள், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்தி சென்றதில் 2 பேர் சிக்கினர், 5 பேர் தப்பியோடி விட்டனர். இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி, மார்க்கண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ5,600 மற்றும் 9 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய சகாதேவன், செல்வம், மணி, சரவணன் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: