×

கோவை மாவட்டஅதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியல்

கோவை, ஏப். 28: கோவை மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் முடிவடைந்ததையொட்டி, புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அதன் விவரம்:* கோவை புறநகர் தெற்கு மாவட்டம்: அவைத்தலைவர் - ஏ.வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் - எஸ்.பி.வேலுமணி (முன்னாள் அமைச்சர்), இணை செயலாளர் - எஸ்.மணிமேகலை, துணை செயலாளர்கள் - பத்மினி தனபால், என்.கே.செல்வத்துரை, மாவட்ட பொருளாளர் - என்.எஸ்.கருப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் - டி.ஏ.சந்திரசேகர் (தொண்டாமுத்தூர் தொகுதி), வி.ராமசாமி (கிணத்துக்கடவு தொகுதி), ஜி.கே.தெப்பீஸ்வரன் (சூலூர் தொகுதி), கே.பி.சுப்பிரமணியன் (பொள்ளாச்சி தொகுதி).  கோவை புறநகர் வடக்கு மாவட்டம்: அவைத்தலைவர் - எஸ்.சாமி என்கிற குமாரசாமி, மாவட்ட செயலாளர் - பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ, இணை செயலாளர் - எஸ்.லதா, துணை செயலாளர்கள் - ஆர்.பிரேமா, பி.டி.கந்தசாமி, மாவட்ட பொருளாளர் - ஏ.பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் - சதீஷ்குமார் (கவுண்டம்பாளையம் தொகுதி), எஸ்.ஆர்.மணிமேகலை (மேட்டுப்பாளையம் தொகுதி), எம்.கணேசமூர்த்தி (அவினாசி தொகுதி) ஆகியோர் ஆவர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Tags : Coimbatore District ,AIADMK ,
× RELATED தனியார் பஸ்சில் பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு