மெஞ்ஞானபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

உடன்குடி,ஏப்.2:  மெஞ்ஞானபுரம் ஊராட்சியில் ரூ.56லட்சம் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். உடன்குடி யூனியனுக்குட்பட்ட மெஞ்ஞானபுரம் ஊராட்சியில் பேவர்பிளாக் சாலை உள்ளிட்ட ரூ.56லட்சம் மதிப்பிலான துவக்க நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை வகித்தார். மெஞ்ஞானபுரம் சேகரகுரு கோல்டுவின் ஆரம்ப ஜெபம் செய்தார். திருச்செந்தூர் ஆர்டிஓ புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், பொற்செழியன், பஞ்சாயத்து தலைவர் கிருபா ராஜபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேவர்பிளாக் அமைக்கும் பணிக்கு  அடிக்கல் நாட்டினார்.

இதில் திமுக மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், முன்னாள் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், உடன்குடி நகர செயலர் ஜான்பாஸ்கர், யூனியன் துணைச்சேர்மன் மீராசிராசூதீன், மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளர்அணி மகாவிஷ்ணு, மாவட்ட துணைஅமைப்பாளர்கள் வர்த்தகஅணி இளங்கோ, ரவிராஜா, சிறுபான்மைநலஉரிமைப்பிரிவு சிராஜூதீன், கலைஇலக்கிய அணி ரஞ்சன், இளைஞரணி மணப்பாடு ஜெயபிரகாஷ், மாணவரணி ராஜாபிரபு, அலாவுதீன், விவசாயஅணி பெத்தாமுருகன், பேரூராட்சி கவுன்சிலர் அஸ்ஸாப்அலி பாதுஷா, பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், மெஞ்ஞானபுரம்  செயலாளர் ஜெரால்டு,  எள்ளுவிளை செயலாளர் மோகன், ஒன்றிய தகவல்தொழில் நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: