திருஉத்திரகோசமங்கை அருகே பட்டா திருத்த சிறப்பு முகாம்

கீழக்கரை, பிப். 11:  திருஉத்திரகோசமங்கை அருகே நல்லிருக்கை  கிராமத்தில் மக்களை தேடி வருவாய் துறை சார்பில் கணினி திருத்தம், பட்டா  வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் தலைமை  வகிக்க, துணை வட்டாட்சியர் பழனிக்குமார், தலைமை அளவர் சொக்கநாதன், வருவாய்  ஆய்வாளர் பகவதி, கிராம நிர்வாக அலுவலர் சபரி, உதவியாளர்கள் லெட்சுமி,  ஊராட்சி மன்ற தலைவர் தனபாக்கியம் சேகர் முன்னிலை வகித்தனர். முகாமில்  பொதுமக்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, உடனடி  தீர்வு காணப்பட்டது.

Related Stories: