கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இவிஎம், கன்ட்ரோல் யூனிட் ஒதுக்கீடு செயல்விளக்க கூட்டம் க

ரூர், பிப்.11: தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு பகுதியிலும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளில் நம்பகத் தன்மையை வேட்பாளர்கள் அறிந்துகொள்ளும்படி அவர்கள் முன்னிலையில் இவிஎம் மற்றும் கன்ட்ரோல் யூனிட் ஒதுக்கீடு தொடர்பான செயல் விளக்க கூட்டம் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி பொறியாளர் நக்கீரன், தேர்தல் துறை அதிகாரிகள் செல்லப்பன், வெங்கட்ராமன், மணிவேல், தங்கமணி, திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட தேர்தல் துணை அதிகாரியும் மாநகராட்சி அமைப்பு அதிகாரி சிவகுமார் இவிஎம் மற்றும் கன்ட்ரோல் யூனிட் ஆகிய கருவிகள் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் எந்தெந்த வாக்குச்சாவடிக்கு மின்னணு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய செயல் விளக்கத்துடன் எடுத்துக்கூறி தெளிவுபடுத்தினார். இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: