சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி பல்கலைக் கழக தேர்வில் முதலிடம்

திருச்சி, பிப்.8: சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் கடந்த பருவத்தேர்வில் அண்ணா பல்கலை கழகம் ெவளியிட்ட மாணவர்கள் தரவரிசை பட்டியலில் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதுநிலை கணிப்பொறியியல் துறையைச் சார்ந்த மாணவி டி.திவ்யா தமிழ்நாட்டில் முதலிடத்தை ெபற்றுள்ளார். மேலும் ஆர்.அபரஜிதா என்ற மாணவி இளநிலை படிப்பில் 21-ம் இடம் ெபற்றுள்ளார். பல்கலை கழக அளவில் சிறப்பிடம் ெபற்ற மாணவ, மாணவிகளையும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி ெபற்றுள்ளனர். இம்மாணவர்கள் தேர்ச்சி ெபற உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் ெதரிவிக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளை கல்லூரி தாளாளர், இயக்குநர், ெசயலர், அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்கள் அனைவரும் வாழ்த்தி பாராட்டினார்கள்.

Related Stories: