காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம்: கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இளம் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில், மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இதனை, கலெக்டர் ஆர்த்தி திறந்து வைத்து பார்வையிட்டார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும்19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில், வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக மாதிரி வாக்குச்சாவடி மையம் துவங்கப்பட்டது.

இதில் வாக்குச்சாவடி மையத்தை போல் வாக்குச்சாவடி அலுவலர், துணை அலுவலர், வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுபாட்டு இயந்திரம், வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபிஏடி இயந்திரம் ஆகியவை வாக்குசாவடி அலுவலர்களை கொண்டு காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை இயங்கும்படி செய்துள்ளனர். இந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ஆர்த்தி நேற்று திறந்து வைத்தார். இதில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் கற்பகம், எஸ்பி டாக்டர் சுதாகர், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசராவ், மாநகராட்சி ஆணையர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: