வடசென்னை பகுதிகளில் கஞ்சா விற்ற தம்பதி கைது: டோர் டெலிவரி செய்தது அம்பலம்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி, சந்தேகத்தின் பேரில், அவர்களது பைக்கை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள், வியாசர்பாடி தாமோதரன் நகரை சேர்ந்த தினகர ராஜா (27), அவரது மனைவி பிரியா (26) என்பது தெரியவந்தது.

இவர்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து பதுக்கி வைத்து, வியாசர்பாடி, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா கேட்கும் நபர்களுக்கு, டோர் டெலிவரி செய்து வந்தது  தெரிந்தது. இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: