பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசாமிக்கு வலை

பெரம்பூர்: பெரவள்ளூர் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த வாணி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நேற்று முன்தினம், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்ச்சியாக ஆபாச வீடியோக்கள், படங்கள் வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, அந்த செல்போன் எண் யாருடையது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: