பக்கத்து வீட்டு பெண் திட்டியதால் 8 வயது சிறுமி திடீர் தற்கொலை

சென்னை: குன்றத்தூர் துரைசாமி முதலி தெருவை சேர்ந்தவர் சிவா(40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களுக்கு வைஷ்ணவி(13) என்ற மகளும், நவீன்(8) என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி, கோவூரில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்துவந்தாள். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, வைஷ்ணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். தகவலறிந்து வந்த குன்றத்தூர் போலீசார், உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம்பெண், வாலிபருடன் அடிக்கடி சந்தித்து ரகசியமாக பேசியதும், இதனை கண்ட வைஷ்ணவி, குடியிருப்பு வாசிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், வைஷ்ணவியை திட்டியதால், மனைமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி சிறுமி தனது நோட்டில் கைப்பட எழுதி இருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: