கந்தர்வகோட்டையில் ஊரடங்கு விதியை மீறிய லாரி ஓட்டுனருக்கு அபராதம்

கந்தர்வகோட்டை, ஜன.24: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுதும் நேற்று முழு ஊரடங்கு 3வது வாரமாக கடைபிடிக்கப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சாலையில் தேவையின்றி சுற்றித்திரிவோரை கண்காணிக்க கந்தர்வகோட்டை பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, முககவசம் இல்லாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், லாரி ஓட்டுநருக்கும் அபராதம் விதித்தனர். அபராத தொகைக்காக ரசீது வழங்கப்பட்டது. மேலும் காவலர்கள் இனிவரும் காலங்களில் அனைவரும் முழுக்க அணிந்து வரவேண்டும் என அறிவுரை கூறி அனுப்பினார்.

Related Stories: