ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி

ராஜபாளையம், ஜன. 22: ராஜபாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. ராஜபாளையம் ஒன்றியத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை உட்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட ஊரகம் வட்டாரம் சார்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி ராஜபாளையம் கே.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், கிராம ஊராட்சி கிராம சிவக்குமார், ஊராட்சி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். ஒன்றியப் பெருந்தலைவர் சிங்கராஜ் தலைமையில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பங்கஜம் ஏற்பாடு செய்திருந்தார். இதில், ராஜபாளையம் வட்டாரத்துக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் உபதலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அனைத்து களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: