மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா

தாம்பரம்: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தற்கு உட்பட்ட தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இதுவரை 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் 17 பேருக்கும், தாம்பரம் பகுதியில் 14 பேருக்கும், செம்பாக்கம் பகுதியில் 5 பேருக்கும் என 36 ஊழியர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், மாநகராட்சி பகுதிகளில் நேற்று மட்டும் 237 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனுடன் சேர்த்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 940ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட மாநகராட்சி, மாநகர நகர் நல அலுவலரே காரணம் என சக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சியில், ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்கும்போது, பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர். இதனை,  மாநகராட்சி மாநகர நகர் நல அலுவலர் பார்த்திபன் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததே தொற்று பரவலுக்கு காரணமென சக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: