உள்ளாட்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன. 6: அனைத்து முன்கள பணியாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கொரோனா ஊக்கத் தொகையாக ரூ.15 ஆயிரம் உடனடியாக வழங்கிட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் வழங்கிட வேண்டும், சீருடை, காலணி, பணி தனியார் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்திட வேண்டும். ஊழியர்களின் வைப்பு நிதி தொகையினை சரி பார்த்து நிலுவை தொகையினை உடனே வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்த வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று நகராட்சி அலுவலகம் முன் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் மற்றும் என்.எம்.ஆர் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி துப்புரவு ஊழியர் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற் சங்க மாநில செயலாளர் மோகன், மாவட்ட செயலாளர் முருகையன் மற்றும் பொறுப்பாளர்கள் கலியமூர்த்தி, ஆறுமுகம், துரைசாமி, முனியப்பன், பொன்னையன், நாகலிங்கம், கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: