நன்னிலத்தில் நம்மாழ்வார் நினைவு நாள்

நன்னிலம், டிச. 31: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இயற்கை வழி வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாகவும், இந்திய பாரம்பரிய விதை ரகங்களை பாதுகாக்கும் வகையிலும், ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றும் விதமாகவும், தமிழகத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடம் செயல்விளக்கம் மூலம் பரப்புரை செய்த இயற்கை வேளாண். விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளையொட்டி அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ், மையத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கரிகாலன் மற்றும் உதயகுமார், உத்தமன், ஜானகிராமன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: