அய்யர்மலை அரசு கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் துவக்க விழா

குளித்தலை, டிச.20: அய்யர்மலை அருகே உள்ள இரணியமங்கலம் ஊராட்சியில் அய்யர்மலை அரசு கல்லூரி சார்பில் ஒரு வார நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவங்கியது. கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலை அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் ஒரு வார காலம் இரணியமங்கலம் ஊராட்சி வளையப்பட்டி பகுதியில் நடைபெறுகிறது. முகாமிற்கான துவக்க விழா ஊராட்சி மன்ற அலுவலக வளாகம் முன்பு நடைபெற்றது.

விழாவிற்கு அரசு கல்லூரி முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பெரியசாமி அனைவரையும் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா சரவணன், மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன், துணைத்தலைவர் மோகனா ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் புவனேஸ்வரி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வளையப்பட்டி பகுதியிலுள்ள நூலகம், பள்ளி கட்டிடம், கூட்டுறவு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது. மாலை நேரங்களில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவத்துறை சார்பில் கொரோனா, எய்ட்ஸ், டெங்கு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுமார் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றுகிறார். வேளாண்மை தொழில்நுட்பம் வளர்ச்சி குறித்து வேளாண் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயராமன் பேசுகிறார்.

உணவே மருந்து மருந்தே உணவு தலைப்பில் சித்த மருத்துவர் டாக்டர் நடராஜன் பேசுகிறார். ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஒருங்கிணைந்த சந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வினோதினி ஆகியோர் கல்லூரி மாணவர்களிடையே விளக்கம் அளித்து பேசுகின்றனர். முகாமின் இறுதி நாளான வருகிற 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பங்பேற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. முகாம் காண ஏற்பாட்டினை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: