அய்யர்மலை கோயிலில் 4வது சோம வார விழா

குளித்தலை, டிச. 14: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற 1117 படி உயரம் கொண்ட ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சோமவார விழாவாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல் கடந்த கார்த்திகை முதல் திங்கள்கிழமை சோமவார விழா தொடங்கியது. இவ்விழாவில் சுற்று வட்டாரங்களில்் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள், குடிபாட்டுக்காரர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். தொடர்ந்து 3ம் சோமவார விழா முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ஆயிரக்கணக்கில் வெளிமாவட்ட மற்றும் சுற்றுவட்டாரத்திலிருந்து பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று கார்த்திகை மாதம் நான்காம் சோமவார விழா விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் திரளான பொதுமக்கள்் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். உலக அமைதிக்காகவும் மக்கள் பசி பஞ்சம் இன்றி ஒற்றுமையுடன் இருக்கவும் கார்த்திகை மாத கடைசி சோமவார விழாவில் அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் 1117 படி உயரம் கொண்ட மலை உச்சிக்கு உருண்ட படியே நங்கவரம் ரங்கராஜன் கடந்த 27 வருடமாக நேர்த்திக்கடன் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்ேபாது 12வது வருடமாக அவரது பேரன் ஜீவானந்தம் தாத்தாவை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நேற்று உருண்ட படியே மலை உச்சிக்கு சென்றார்.

Related Stories: