கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் ஊஞ்சல் உற்சவம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கும்பகோணம், டிச.8: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் மாநகரில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் ஒன்றாக சாரங்கபாணி சாமி கோயில் விளங்குகிறது. இந்த கோயிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது சிறப்பாகும். இந்நிலையில் இந்த வருடத்தின் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. இதில் சாரங்கபாணி சாமி உப நாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பெருமாள் மற்றும் தாயார் பிரகார புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணி அளவில் ஊஞ்சல் மண்டபத்தில் பெருமாள் மற்றும் தாயார் எழுந்தருளி டோலோத் சவம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  தாயார் ஊஞ்சல் உத்சவம் எதிர்வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: