முழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை

பேராவூரணி, ஏப், 23: கொரோனா தொற்று காரணமாக அரசு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பு காலத்தில் கடைபிடிக்கும் அனைத்து வழிபாடுகளையும் வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டுமென பேராவூரணி ஜமாத் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி கூட்டம் தலைவர் அப்துல் முத்தலிப் தலைமையில், செயலாளர் ஏசியன் சம்சுதீன், உயர்மட்டக்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில், வருகின்ற 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா இரண்டாவது அலை பரவலால் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால், இஸ்லாமிய பெருமக்கள் நோன்பு காலத்தில் கடைபிடிக்கும் அனைத்து வழிபாடுகளையும் தொழுகை, நோன்பு திறப்பு, இரவு சிறப்பு தொழுகை, உள்ளிட்டவைகளை அவர்களது வீடுகளிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். வழக்கமாக நோன்பு திறப்பதற்காக பள்ளிவாசல்களில் காய்ச்சி வழங்கும் நோன்பு கஞ்சி ஞாயிற்றுக்கிழமை ஒரு. நாள் மட்டும் காய்ச்சாமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணை தலைவர் கமருதீன், துணை செயலாளர் அப்துல்லா, உறுப்பினர்கள் அல்லாபிச்சை, முஜிபுர் ரகுமான், இப்ராஹிம், சாதிக்அலி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>