விதிகளை பின்பற்றாத உணவகங்களுக்கு சீல்

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து நேற்று முன்தினம் வரை ரூ.3,71,29,795 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தேனாம்பேட்டை மண்டல உதவி ஆணையர் தலைமையில் நேற்று வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 3 பிரபல உணவகங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் விதிமுறைகளை கடைபிடிக்காததால், அந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Related Stories:

>